தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து… ஸ்பெஷல் பஸ் இயக்கம்!

Published On:

| By Minnambalam Login1

chennai local cancelled

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகளின் காரணத்தால், பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரயில்கள் இன்று(ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. chennai local cancelled

காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும் இரவு 10 மணி முதல் 11.59 வரை பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி செல்லும் ரயில்கள் இயக்கப்படமாட்டாது என்று தெற்கு இரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில், சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரத்திற்கும், கூடுவாஞ்சேரியிலிருந்து செங்கல்பட்டிற்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. chennai local cancelled

இதற்கு மாற்றாக, பயணிகளின் தேவையைக் கருதி 30 சிறப்பு எம்டிசி பேருந்துகள் பல்லாவரம் – கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும், 20 சிறப்புப் பேருந்துகள் பல்லாவரம் – கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தால் ஏற்படவிருக்கும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, கூடுதலாக 175 காவலர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரியில் நிறுத்தப்படுவார்கள் என்று  தாம்பரம் நகரத்தின் காவல்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கூடுவாஞ்சேரி செல்லும் பேருந்துகள் ஹிந்து மிஷன் மருத்துவமனையில் ஆகஸ்ட் 14 வரை நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, மக்களை இருபுலியூர் பேருந்து நிறுத்தம் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையத்தை பயன்படுத்துமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

தயாரிப்பாளர் சங்கம் Vs நடிகர் சங்கம்… முற்றும் மோதல்… காரணம் இதுதானா?

ஆடிப்பெருக்கில் அதிர்ஷ்டம்… தங்கம் விலை திடீர் சரிவு… மிஸ் பண்ணிடாதீங்க!

அமெரிக்க தேர்தல்… ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share