அமெரிக்க தேர்தல்… ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்

Published On:

| By Selvam

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தேவையான வாக்குகளை கட்சி நிர்வாகிகளிடம் இருந்து கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி தரப்பில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ பைடன், அதிபர் ரேஸில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸுக்கு அதிபர் வேட்பாளராக வாய்ப்பு இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். அவருக்கு ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஓபாமா உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயக கட்சி பிரதிநிதிகளிடம் இருந்து போதுமான வாக்குகளை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார் என்று அக்கட்சியின் தேசியக் குழுத் தலைவர் ஜேமி ஹாரிசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அடுத்த வாரம் வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன். நாட்டின் நலனை முன்னிறுத்தி என்னுடைய பிரச்சாரம் இருக்கும்”  என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் கமலா ஹாரிஸ் பேசும்போது,

“கட்சியின் ஆதரவு இல்லாமல் என்னால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. அவர்களின் அர்ப்பணிப்பு என்பது அளவிடமுடியாது. நாங்கள் எங்கள் நாட்டை நேசிக்கிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம். இதை தான் அமெரிக்க மக்களிடம் பிரச்சாரமாக முன்வைக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹாலிவுட்டில் ‘ராயன்’ சாதனை… தனுஷுக்கு கிடைத்த வேற லெவல் அங்கீகாரம்!

கரைபுரண்டு ஓடும் காவிரி… களைகட்டும் ஆடிப்பெருக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share