நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கன அடி உபரி நீர் இன்று (நவம்பர் 30) திறந்துவிடப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன மழை எச்சரிக்கையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது.
இந்தசூழலில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 3,098 கன அடியாக உள்ளது.
இதன் காரணமாக ஏரியின் நீர் மட்டம் 22.53 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று 6,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் சிறுகளத்தூர், நந்தம்பாக்கம் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செல்போன் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வேளாண் பணிகளில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு டிரோன்கள்!
