ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் ஷாருக்கான் பிரபல ஹிந்தி இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் “டன்கி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஷாருக்கானுடன் நடிகை டாப்ஸி பன்னு மற்றும் நடிகர் விக்கி கௌசல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். டாங்கி பிளைட்” மூலம் சட்டவிரோத குடியேற்றத்தை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தில் ஷாருக்கானின் டன்கி படம் உருவாகியுள்ளது.
https://twitter.com/RajKumaarHirani/status/1729895530258645418
சமீபத்தில் டன்கி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் “Lutt Putt Gaya” என்ற பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
வரும் டிசம்பர் 21 ஆம் தேதி டன்கி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டன்கி படத்தின் ட்ரெய்லர் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…