தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 30) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தெலங்கானா மாநிலத்தில் பாரத ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2023 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பிஆர்எஸ் – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். நவம்பர் 28-ஆம் தேதியுடன் தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.
இந்தநிலையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு தேர்தல் துவங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலுக்காக 35,655 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2.5 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3.26 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: டொமேட்டோ – பிரெஞ்ச் ஆனியன் சூப்