சைதை துரைசாமி மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?

Published On:

| By indhu

Admission to Saidai Duraisamy Hospital - Do you know what's wrong?

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீர் மூச்சுத்திணறல் காரணமாக இன்று (மே 28) மருத்துவமனையில்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சைதை துரைசாமி:

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சைதை துரைசாமி வெற்றி பெற்றார். தொடர்ந்து 2011-2016 காலகட்டத்தில் சைதை துரைசாமி சென்னை மாநகர மேயராக இருந்தார்.

எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் அரசு மற்றும் ஐஏஎஸ் பணிகளுக்கான பயிற்சி மையத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அதே சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட துரைசாமி, திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியத்திடம் தோல்வி அடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதி:

இந்நிலையில், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இது துரைசாமியை மனதளவில் மிகவும் பாதித்தது.

இந்தநிலையில், இன்று (மே 28) காலை திடீரென ஏற்பட்ட மூச்சுத்திண்றல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சைதை துரைசாமி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நிமோனியா காய்ச்சல் காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சைதை துரைசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

கோவை: கையில் பாம்புடன் போஸ்… வனத்துறை ஆக்‌ஷன்!

முல்லைப்பெரியாறில் புதிய அணை: மதுரையில் விவசாயிகள் போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share