சில வருடங்களுக்கு முன்பு வோடபோன் உடன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் இணைக்கப்பட்டது. அன்றிலிருந்து வோடபோன் ஐடியா (VI) என்ற பெயரிலேயே இயங்கி வருகிறது. Vodafone 1 year plan details
தற்போது ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் தொல்லையே இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, ஒரு சிறப்பான திட்டத்தை வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Vodafone 1 year plan details
இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் ரூ.3199 செலுத்தி ரீசார்ஜ் செய்யும்போது ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. அதுமட்டும் இல்லாமல் VI Movies மற்றும் TV சந்தாவும் இணைகிறது. இது மட்டுமின்றி பிங்கே ஆல் நைட் (Binge all night), வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் (weekend data rollover), VI அன்லிமிடெட் நன்மைகள் (VI Hero Unlimited benefits), டேட்டா டிலைட்ஸ்(Data Delights) போன்ற நன்மைகளும் இதில் கிடைக்கின்றன.
இதைத்தவிர வழக்கமான நன்மைகளான ஒரு வருடத்திற்கான அன்லிமிடெட் வாய்ஸ்கால், தினமும் 2GB டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்றவைகளும் கிடைக்கும். ஒரு வருட ரீசார்ஜ் திட்டத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறப்பான திட்டமாகும்.
அமேசான் பிரைம் வீடியோஸ் வேண்டாம் எனக்கருதும் வாடிக்கையாளர்கள் அதற்கு பதிலாக ரூ.3099 செலுத்தி ரீசார்ஜ் செய்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவைப் பெற்றுக்கொள்ள முடியும். மேற்கண்ட திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து நன்மைகளும் இந்த திட்டத்திற்கும் கிடைக்கும்.
மற்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 5ஜி சேவையைத் தொடங்கிவிட்ட நிலையில் வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் இன்னும் 5ஜி சேவை தொடங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி வேகத்தில் டேட்டா கிடைக்காது என்பது மட்டுமே இந்தத் திட்டத்தின் ஒரு குறையாக உள்ளது. Vodafone 1 year plan details
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணா, கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்
சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸின் ‘SK 23’ கதை இதுதான்?
கிளாம்பாக்கம்: பயணிகள் வசதிக்காக… நீட்டிக்கப்பட்ட மின்சார ரெயில்கள்!