கெஜ்ரிவாலை ஜெயிலுக்கு அனுப்பிய நிறுவனத்துக்கு ’டாஸ்மாக்’ மதுபான ஆர்டர்.. விஜய் அரசு மீது திமுக குற்றச்சாட்டு!

By Mathi

|

Published on 18 Nov 2026, 5:28 AM

DMK-Vijay Govt- TASMAC

டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை சிறைக்கு அனுப்பிய, அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் வெளிமாநில நிறுவனத்துக்கு தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுபான சப்ளைக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியதாவது: மதுபானங்கள் விநியோகம் செய்வதற்காக 11 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தார்கள். ஆனால், 24 மணி நேரத்திற்குள் மீண்டும் அதே நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இதில் ஏதோ மிகப்பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த யாரையோ தமிழ்நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இனிமேல் எந்தப் பிழைப்பும் கிடையாது.

ADVERTISEMENT

முதலில் 11 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள். பின்னர் 24 மணி நேரத்திற்குள் அந்த அனுமதியை ரத்து செய்துவிட்டு, மீண்டும் அதே நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன?

ஏற்கெனவே அமலாக்கத் துறை (ED) விசாரணைக்கு உள்ளான நிறுவனங்கள் அவை. அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் சிறைக்குச் செல்வதற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கே தமிழ்நாட்டிலும் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். ஆக, இவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மிக விரைவில் சிக்கப் போகிறார்கள். என்னிடம் இது தொடர்பான ஆவணங்கள் ஒவ்வொன்றாகச் சேகரமாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் 6 மாதங்களுக்குள் இந்த விவகாரம் முழுவதும் வெட்டவெளிச்சமாகி, தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியவரும். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி கூறினார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel