தனது வீட்டில் 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பெண்ணின் நீண்டகால ஆசையை நிறைவேற்றுவதற்காக தமிழக முதல்வர் விஜய்யிடம் ஒரு கோரிக்கை வைத்தார் பிரியங்கா காந்தி. டெல்லியில் சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் நடந்த இந்தச் சம்பவம் என்ன?
டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, தனது வீட்டில் கடந்த 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பெண் ஒருவரை முதல்வர் விஜய்யிடம் அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது, அந்தப் பெண்ணுக்கு முதல்வர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்டகால ஆசை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
இதையடுத்து அந்தப் பெண்ணின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், அந்தப் பெண்ணிடம் நலம் விசாரித்தும் பேசினார்.


பிரியங்கா காந்தி தனது வீட்டில் 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பெண்ணின் நீண்டகால ஆசையை முதல்வர் விஜய்யிடம் நேரடியாகத் தெரிவித்து நிறைவேற்றிய சம்பவமும், விஜய்யுடன் அந்தப் பெண் எடுத்துக்கொண்ட போட்டோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.









