பத்திரிகையாளர்களை தள்ளிவிட்ட காவல்துறை… சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

By Kavi

|

Published on 17 Nov 2026, 11:16 PM

சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் முகாம் அலுலவகத்தின் வாயிலில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல்துறை அத்துமீறியதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், பொதிகை வளாகத்திலுள்ள பாமினி இல்லத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் புதிய முகாம் அலுவலகமாகவும் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இதனை முதல்வர் விஜய் இன்று (நவம்பர் 17) ஆய்வு செய்தார்.

அப்போது செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளார்களும் வந்திருந்தனர். ஆனால் அங்கு வந்திருந்த போலீசார் பத்திரிகையாளர்களை அனுமதிக்காத நிலையில் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

ADVERTISEMENT

தொடர்ந்து பத்திரிகையாளர்கள், சிஎம் சார், மாண்புமிகு முதலமைச்சர் என கோஷம் எழுப்பினர். அங்கு நடந்ததையும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில் காவல்துறையினரின் செயல்பாடுகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”சென்னை கிரீன்வேஸ் சாலை, பொதிகை வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முகாம் அலுவலகத்தின் புதிப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் இன்று மாலை 4 மணியிளவில் அங்கு வந்துள்ளார்.

இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் பொதிகை வளாகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் பத்திரிகையாளர்களை பொதிகளை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மக்கள் தொடர்புத்துறை அலுவலரை தொடர்புகொண்டு பேசியபோது, வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் வளாகத்திற்கு வெளியிலிருந்து செய்தி சேகரித்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும், பொதிகை வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையின் எதிர்புறத்தில், காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அமைத்துள்ள தடுப்புகளுக்குப் பின்னால் சென்று நின்றுள்ளனர்.

அப்போது, அங்கு வந்த காவல் உதவி ஆணையர் தனசெல்வன் பத்திரிகையாளர்களை அந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று கூறியுள்ளார். செய்தி சேரிக்க விடாமல் ஏன் தடுக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு எந்த வித விளக்கமும் அளிக்காமல் பத்திரிகையளார்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தியுள்ளார். பத்திரிகையாளர்கள் அங்கிருந்து நகராத நிலையில், உதவி ஆணையர்தனசெல்வன் மற்றும் அங்கிருந்து காவல்கள் பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளிலும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்படும் நிகழ்வுகள் தொடர்கதையாகியுள்ளது. செய்தி சேரிகப்பது பத்திரிகையாளர்களின் உரிமை. அதை தடுத்து இடையூறு ஏற்படுத்துவது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகை சுதந்திரத்தை மறுப்பதற்குச் சமமாகும்.

ஆகவே, பத்திரிகையாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு, கண்ணியக்குறைவாக நடத்திய காவல் உதவி ஆணையர் தனசெல்வன் மற்றும் காவல்களின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

அரசு விழாக்களில் பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுப்பது மற்றும் அவர்களை கண்ணியக்குறைவாக நடத்துவது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிட வேண்டும் ”என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel