சிவகார்த்திகேயன் -ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘SK 23’ படத்தின் கதை குறித்த, புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் ‘SK 23’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று தொடங்கியது. இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வாலும், முக்கிய வேடமொன்றில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
#Sivakarthikeyan surrounded by fans during the Shooting at VIT college
pic.twitter.com/7MajptfION— Karthik Ravivarma (@Karthikravivarm) February 24, 2024
சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘சப்த சாகரடச்சே எல்லோ’ பட ஹீரோயின் ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது வேலூர் விஐடி கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் – ருக்மணி வசந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன. லேட்டஸ்ட் தகவலின்படி கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் படத்தின் கதை குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த படம் ஸ்பை திரில்லராக உருவாகி வருகிறதாம்.’துப்பாக்கி’ படம் போன்று ஸ்டைலிஷ் ஆகவும், ‘கத்தி’ படம் போல சமூக பிரச்சினையை பேசுவதாகவும் திரைக்கதை எழுதப்பட்டு இருக்கிறதாம்.
இதனால் சிவகார்த்திகேயன் – முருகதாஸ் இருவருக்குமே இப்படம் மிகப்பெரிய கம்பேக் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. தற்காலிகமாக ‘SK 23’ என அழைக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிளாம்பாக்கம்: பயணிகள் வசதிக்காக… நீட்டிக்கப்பட்ட மின்சார ரெயில்கள்!