புதிதாக கட்டப்பட்ட சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, 10 மின்சார ரெயில்கள் இன்றுமுதல் (பிப்ரவரி 26) கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு மக்கள் கூட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இந்த கூட்டநெரிசலைக் குறைப்பதற்காக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த மின்சார ரெயில்கள் இனி, சென்னை கடற்கரை முதல் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட உள்ளது.
அதன்படி சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு 7.19 , 8.15 , 8.45 , 8.55 , 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், இன்றுமுதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன.
இதேபோல கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரத்துக்கு 8.55, 10.10, 9.45, 10.25 , 11.20 ஆகிய நேரங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். இந்த ரெயில்கள் வார நாட்களிலும் நீட்டித்து இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் நீட்டிப்பு:
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு 7. 20, 8. 20, 8. 40, 9.00, 9.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன.
அதேபோல கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 ஆகிய நேரங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும், ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார ரெயில்கள் தற்போது கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வோருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கவின்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் இணையும் ‘பொன்னியின் செல்வன்’ ஜோடி… இயக்குநர் யாருன்னு பாருங்க!
”மூப்பனாரின் ஆத்மா ஜி.கே.வாசனை மன்னிக்காது” : செல்வ பெருந்தகை