விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காங். தேர்தல் பணிக்குழு அறிவிப்பு!

Published On:

| By indhu

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக்குழு இன்று (ஜூன் 14) அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக பணியாற்றுவதற்காக 11 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை கடந்த 12ஆம் தேதி திமுக தலைமை கழகம் அறிவித்தது.

Vikravandi by-election: Cong. Announcement of Election Commission!

ADVERTISEMENT

இந்நிலையில், இடைத்தேர்தலில் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக பணியாற்றுவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பிலும் 18 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜூன் 14) அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு

ADVERTISEMENT

Vikravandi by-election: Cong. Announcement of Election Commission!

  • கே.வீ.தங்கபாலு முன்னாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்
  • ஈ.வெ.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ, முன்னாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்
  • எம். கிருஷ்ணசாமி, முன்னாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
  • சு. திருநாவுக்கரசர் முன்னாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்
  • கே.எஸ்.அழகிரி முன்னாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
  • எஸ். ராஜேஷ் குமார், எம்.எல்.ஏ., சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்
  • எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்.பி.
  • ஆர். சுதா, எம்.பி.
  • ஆர். ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. தலைவர், கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
  • துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ. தலைவர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
  • டி.என்.முருகானந்தம், துணைத்தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
  • கே.ராணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
  • விச்சு (எ) எம்.லெனின் பிரசாத், தலைவர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்
  • ஆர்.பி.ரமேஷ், தலைவர், விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
  • ஆர்.டி.வி. சீனிவாசகுமார், தலைவர், விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
  • முகம்மது குலாம் மொய்தீன், துணைத்தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
  • ஆர். ரங்கபூபதி, துணைத்தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
  • வழக்கறிஞர் ஆர்.ராஜ் மோகன்

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஆக்கிரமிப்பு… ஆக்‌ஷனில் இறங்கிய ஆணையர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share