ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிக்கும் தொனியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று (ஜூன் 12) சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழா மேடைக்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன், அங்கு உட்கார்ந்திருந்த அமித்ஷா, வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்தியவாறு சென்றார்.
அப்போது தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரை கண்டிக்கும் தொனியில் பேசினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் முன்னாள் தலைவர் தமிழிசைக்கும் இடையே உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அமித்ஷா கண்டிக்கும் தொனியில் தமிழிசை சவுந்தரராஜனிடம் மேடையில் வைத்து பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விழா நிகழ்ச்சி முடிந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழிசை சவுந்தரராஜனிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதில் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.
அமித்ஷாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள காங்கிரஸ், “பாஜகவின் கலாச்சாரம் மற்றும் பெண்கள் மீதான அணுகுமுறை இதுதான்.
சுயமரியாதை உடையவராக இருந்தால் அமித்ஷாவுக்கு தக்க பதிலடி கொடுத்து தமிழிசை கட்சியில் இருந்து விலக வேண்டும். மருத்துவரும் முன்னாள் ஆளுநருமான நீங்கள், குற்றப்பின்னணி உடைய ஒருவரிடம் இருந்து இத்தகைய அவமதிப்பை சந்தித்திருக்ககூடாது” என்று தெரிவித்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை மையம் கூல் அப்டேட்!
டி20 உலகக்கோப்பை: நியூயார்க் மைதானம் அதுக்கு சரிப்பட்டுவராது: கிளாசன் ஓபன் டாக்!
சனாதன தர்மம்…?