வங்க கடல் புயல்: நவம்பர் 20-ல் ஆந்திரா கடற்கரையைக் கடக்கும்.. 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்!

By Mathi

|

Published on 16 Nov 2026, 12:48 PM

Bay of Bengal-Cyclone

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (நவம்பர் 16) மாலைக்குள் புயலாக வலுப்பெற உள்ளது. இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று நவம்பர் 20-ந் தேதி நண்பகலில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் – துனி இடையே மிகத் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்று (நவம்பர் 16) காலை 8.30 மணி நிலவரப்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 11.2 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 86.4 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைப் பகுதியில் மையம் கொண்டுள்ளது.

இது இலங்கையின் திருகோணமலையிலிருந்து கிழக்கு – வடகிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், அந்தமான் நிகோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து மேற்கே 690 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே 700 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு – தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து தெற்கே 910 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இன்று மாலை புயலாக வலுப்பெறும்

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 16) மாலைக்குள் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நவம்பர் 17-ந் தேதி மாலைக்குள் மத்திய மேற்கு வங்கக் கடலில் தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நவம்பர் 20-ல் கரையைக் கடக்கும்

அதன்பிறகு இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும். நவம்பர் 20-ந் தேதி நண்பகலுக்குள் ஆந்திரா மாநிலம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், நெல்லூர் – துனி இடையே மிகத் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel