டெல்லி புறப்பட்ட முதல்வர் விஜய்

By Kavi

|

Published on 16 Nov 2026, 2:28 PM

தமிழக முதல்வர் விஜய் இன்று (நவம்பர் 16) டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள Belonging: A Journey of Love என்ற நூலின் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஹோட்டலில் இன்று  (நவம்பர் 16) நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த விழாவில் பங்கேற்க சோனியா காந்தி விஜய்க்கு அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வருகின்றன. 

இந்த அழைப்பை ஏற்று இன்று பிற்பகல் டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய். 

ADVERTISEMENT

இதையொட்டி தனது கார்மூலம் விமான நிலையம் சென்ற அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி கிளம்பினார். 

முக்கியத்துவம் பெறும் டெல்லி பயணம்

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், விஜய்யின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தொடர்ந்து ஆதரவாகப் பேசி வரும் நிலையில், தமிழகத்தின் நலனைப் பாதுகாக்க காங்கிரஸ் மேலிடத்திடம் விஜய் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel