லியோ vs 2.0 : வசூலில் எது டாப்?

Published On:

| By Kavi

Leo vs 2.0 Which is the highest grossing film

விஜய் நடிப்பில் அக்டோபர் 19 அன்று வெளியான லியோ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது.

லியோ படம் முதல் வாரத்தில் 461 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் லியோ என்றும் கூறியது.

ADVERTISEMENT

இந்நிலையில், 2.0 படத்தின் உலகளாவிய முதல் நாள் வசூல் குறித்து அப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய், சஞ்சய்தத், த்ரிஷா, அர்ச்சுன், மிஷ்கின் நடிப்பில் அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நவம்பர் 19 அன்று வெளியான லியோ திரைப்படம் படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இப்போதுவரை அப்படம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் தினசரி இடம் பெற்று வருகிறது.

ADVERTISEMENT

ரஜினிகாந்த் நடிப்பில் இந்தாண்டு வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 6000 ம் திரைகளில் உலகம் முழுவதும் வெளியான லியோ படம் தமிழ்நாட்டில் மட்டும் 1000 ம் திரைகளில் வெளியிடப்பட்டது.

முதல் நாள் வசூல் எவ்வளவு என்று பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் ஜெயிலர் படத்தின் வசூல் எங்களுக்கு போட்டியில்லை இந்திய சினிமாவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படம் லியோதான் (148.5)என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து அதிர்வலையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

உலகம் முழுவதும் 10,000ம் திரைகளில் வெளியிடப்பட்ட ஷாருக்கானின் ஜவான் படத்தின் முதல் நாள் மொத்த வசூல் 128 கோடி ரூபாய்தான். வட இந்திய மாநிலங்களில் வெளியாகாத லியோ படத்திற்கான பிரதான வசூலுக்கான மாநிலங்கள்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திரா மட்டுமே.

அப்படி இருக்கும்போது  148.5 கோடி ரூபாய் முதல் நாள் மொத்த வசூல் எப்படி என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டதற்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இன்றுவரை பதில் இல்லை,

இந்த நிலையில்முதல் வார முடிவில் உலகளவில் லியோ திரைப்படம் 461+ கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..

இதன் மூலம் தமிழ்சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக மொத்தவசூல் செய்த படம் லியோஎன்று கூறப்பட்டது.

ஆனால் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த பட வரிசையில் முதலிடத்தில் இருப்பது ரஜினிகாந்த், அக்க்ஷய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று வெளியான 2.0 திரைப்படம்.

முதல் வாரத்தில் ரூ 500 கோடியைத் தாண்டியது என்று அப்போது அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்க்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

தற்போது அதனை மீண்டும் மறுபதிவிட்டு நினைவு கூர்ந்துள்ளது லைகா நிறுவனம். சரியான புள்ளிவிவரங்களின்படி, ‘2.0’ முதல்வார முடிவில்  500 கோடி ரூபாய் வசூல் செய்த தமிழ்த் திரைப்படத்தின் தலைப்பைப் பிடித்துள்ளது.

லியோ திரைப்படம் வெளியான முதல் வார முடிவில் 461 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்து இரண்டாவது தமிழ் படமாக பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 600 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 திரைப்படத்தில் இந்தி நடிகர் அக்க்ஷய்குமார் வில்லன் வேடத்தில் நடித்திருந்ததால் வட இந்திய மாநிலங்களில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதிகபட்ச வசூல் செய்ய காரணமாக இருந்தது

தமிழ் படங்களின் பாக்ஸ்ஆபீஸ் மொத்த வசூலில் 699.99 கோடிகள் வசூல் செய்த ஒரே படமாக இன்றுவரை இடம்பெற்றுள்ள 2.0 சாதனையை லியோ முறியடித்து முதல் இடத்தை பிடிக்குமா என்று. ரஜினிகாந்த், விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

கார்த்தி 25: இயக்குநர் அமீர் பங்கேற்காதது ஏன்? ரசிகர்கள் கேள்வி!

கேரளா குண்டுவெடிப்பு: டெல்லியில் இருந்து பினராயி விஜயன் உத்தரவு!

இந்தியாவுடன் மோதும் இங்கிலாந்து… அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share