why ameer not attend the karthi 25 function

கார்த்தி 25: இயக்குநர் அமீர் பங்கேற்காதது ஏன்? ரசிகர்கள் கேள்வி!

சினிமா

ஜோக்கர், குக்கூ மற்றும் ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமாக தயாராகியுள்ள படம் ‘ஜப்பான்’.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். மேலும், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், விஜய் மில்டன், கே.எஸ். ரவிக்குமார், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால், அதனை மிகப்பெரிய அளவில் கொண்டாட,

ஒரு பிரம்மாண்ட ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு, தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி கார்த்தியை வைத்து இயக்கிய ராஜேஷ், சிறுத்தை சிவா, லிங்குசாமி, பிஎஸ் மித்ரன், பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களும்,

why ameer not attend the karthi 25 function

அவரது திரையுலக நண்பர்களான நடிகர்கள் ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, தமன்னா, ஜப்பான் பட கதாநாயகி அனு இம்மானுவேல் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

why ameer not attend the karthi 25 function

மேலும் கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா, சத்யராஜ், சிபிராஜ் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவரை வாழ்த்தினர்.

why ameer not attend the karthi 25 function

ஆனால் கார்த்தியின் திரையுலக பயணத்தை ’பருத்தி வீரன்’ எனும் பிளாக்பஸ்டர் படத்துடன் தொடங்கி வைத்த இயக்குநர் அமீர், ஆயிரத்தில் ஒருவன் என்ற கிளாசிக் படம் கொடுத்த செல்வராகவன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதற்கு நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் அமீருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் இதுவரை நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து இரு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே இயக்குநர் அமீருக்கு விழா மேடையில் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கேரளா குண்டுவெடிப்பு: டெல்லியில் இருந்து பினராயி விஜயன் உத்தரவு!

இந்தியாவுடன் மோதும் இங்கிலாந்து… அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளதா?

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *