அமெரிக்கா முழுவதும் விமானங்கள் புறப்பட தற்காலிக தடை.. ஏர் இந்தியா பயணிகளுக்கு எச்சரிக்கை!

By Mathi

|

Published on 14 Nov 2026, 9:05 AM

Air India

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக்கான தகவல் தொடர்பு சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் விமான நிலையங்களுக்கும் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பு சேவைகளில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை (Nationwide Ground Stop) விதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தத் தடையால் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக்கான தகவல் தொடர்பு சேவைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து புறப்படும் விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளிலும் தாமதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே, பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு தங்களது விமானம் குறித்த தற்போதைய நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப விமான நிலையத்திற்குச் செல்லும் பயணத்தைத் திட்டமிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel