கடும் எதிர்ப்பு: யுபிஎஸ்சி நேரடி நியமனம் ரத்து!

Published On:

| By Minnambalam Login1

lateral entry cancelled

‘லேட்டரல் எண்ட்ரி’ எனப்படும் நேரடி நியமனங்கள் மூலம் செயலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்குக் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி யுபிஎஸ்சி வெளியிட்ட விளம்பரத்தை இன்று(ஆகஸ்ட் 20) யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது.

மத்திய அரசாங்கத்தின் தேர்வாணையமான யூபிஎஸ்சி 45 துணை மற்றும் இணை செயலாளர்களை ‘லேட்டரல் எண்ட்ரி’ அதாவது எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பதற்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி விளம்பரம் செய்திருந்தது.

இதில் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றாததால் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய அரசு யுபிஎஸ்சி தலைவர் ப்ரீதி சுடனுக்கு  ‘லேட்டரல் எண்ட்ரி’ என்கிற நேரடி தேர்வு முறையை ரத்து செய்யச்சொல்லி அறிவுறுத்தியது. அதன்படி லேட்ட்ரல் எண்ட்ரி தேர்வு முறையை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டது யுபிஎஸ்சி.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ : ரிலீஸ் தேதியில் மாற்றம்!

பாலியல் வன்கொடுமை: மறைப்பதற்கு 3 மெடல் கொடுத்த பிரின்ஸ்பால் …கிருஷ்ணகிரி சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம்!

குடையை ரெடியா வச்சிக்கோங்க… அடைமழை ஆரம்பிக்கப்போகுது டோய்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share