துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ : ரிலீஸ் தேதியில் மாற்றம்!

Published On:

| By Minnambalam Login1

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ லக்கி பாஸ்கர் ‘ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தீபாவளிக்கு ஒத்தி வைப்பதாக அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாராகி வரும் திரைப்படம் ‘ லக்கி பாஸ்கர் ‘. 1980 – ல் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் பான் இந்திய ரிலீஸாக வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதே தேதியில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘ தேவாரா ‘ திரைப்படம் வெளியாவதால் செப்டம்பர் 7-ஆம் தேதியே இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை வருகிற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி ரிலீஸாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அப் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் தரத்தினை மேம்படுத்தவே இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

குடையை ரெடியா வச்சிக்கோங்க… அடைமழை ஆரம்பிக்கப்போகுது டோய்!

அக்காவை கொன்றவருக்கு ராக்கி கட்டும் கன்னியாஸ்திரி… 16 ஆண்டுகளாக தொடரும் பந்தம்!

‘மனசிலாயோ’ … ‘வேட்டையன்’ முதல் சிங்கிள் கம்மிங்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share