அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க்கும் இடையில் கடந்து சில நாட்களாகவே மோதல் நடந்து கொண்டு வருகிறது. trump ban tesla in usa… is this true?
ட்ரம்பின் புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எலான் மஸ்க் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இதனிடையில் எலான் மஸ்க்கும் ட்ரம்புக்கு எதிராக பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த எலான் மஸ்க், டிரம்ப் நிர்வாகத்தில் DOGE (Department of Government Efficiency) துறையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெஸ்லா நிறுவன கார்களின் உற்பத்திக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப் போவதாக ஒரு காணொளி வெளியாகி இணையத்தில் வைரலானது. trump ban tesla in usa… is this true?
அதில் “அமெரிக்காவிலிருந்து அனைத்து டெஸ்லா கார்களின் தயாரிப்பையும் உடனடியாக தடை செய்கிறேன். எல்லாரும் அறிந்ததுபோல, சில நாட்களுக்கு முன் எலான் என் முதுகில் குத்தி துரோகம் செய்துவிட்டார். trump ban tesla in usa… is this true?
அவருடைய X தளத்தில் என்னைப் பற்றி எப்ஸ்டீன் (Epstein) தொடர்பான கோப்புகளில் பொய்களைக் கூறி பைத்தியமாகப் பேசினார்.
நான் அமெரிக்கா ஜனாதிபதியாக இருக்கும்போது, அந்த பாம்புக்கு (எலான்) இங்கே பணம் சம்பாதிக்க அனுமதிக்க முடியாது.
ஒரு சில முட்டாள்களை தவிர யாரும் டெஸ்லா கார்களை விரும்புவதில்லை. அவை எளிதில் தீ பிடிக்கும், சீக்கிரம் பழுதாகி விடும். அதனால், அது சிறந்த எலெக்ட்ரிக் கார் என்பதெல்லாம் தவறான புரிதல்.

ஆம், நான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு டெஸ்லா வாங்கினேன். என் ஆதரவை எலானுக்கு காட்டவே அதை வாங்கினேன். trump ban tesla in usa… is this true?
ஆனால் ஒருபோதும் அதை ஓட்டவில்லை. அது முழுவதும் தேர்தலில் அவர் என்னை ஆதரிக்கவேண்டுமென்ற நோக்கத்துக்காகத்தான். அந்த திட்டம் வேலை செய்தது.
இப்போது அந்த மோசமான டெஸ்லா காரை விற்பனைக்கு வைக்கிறேன். யாராவது வாங்க விரும்பினால் 69 டாலருக்கு (5907 ரூபாய்) கொடுத்துவிடுகிறேன். அதுதான் அந்த குப்பை கார் பெறும் உண்மையான மதிப்பு.
முக்கியமாக, இப்போது அந்த பாம்பு, வியாபாரக் கடனில் சிக்கப் போகிறான். இன்னும் சில நாட்களில் என்னிடம் திரும்ப வந்து மன்னிப்பு கேட்பான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கிய வீடியோ (deepfake) என The Quint இணையதளம் செய்தியை சரிபார்த்துள்ளது. trump ban tesla in usa… is this true?
மேலும் இந்த செய்தி தொடர்பாக அமெரிக்காவினுடைய முன்னணி ஊடகங்கள் எதுவும் செய்திகளை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.