ட்ரம்ப் அனுப்பிய படைகள்… பற்றி எரியும் லாஸ் ஏஞ்சல்ஸ்!

Published On:

| By Minnambalam Desk

Trump deploys National Guard to Los Angeles 2025

அமெரிக்க அதிபராக டொனால் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.

இந்த சட்டவிரோத வெளியேற்றத்திற்கு அமெரிக்காவிலேயே மிகப்பெரிய அளவிற்கு எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக, அதிபர் ட்ரம்பின் கடுமையான நடவடிக்கைகளை கலிபோர்னியா அரசு ஒத்துழைக்க மறுத்ததுள்ளது.

அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றம் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது. கலிபோர்னியா மாகாணம் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலும் மெக்சிகோ நாட்டுடனும் எல்லையை பகிர்கிறது. இதனால் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கடுமையான குடிவரவு கட்டுப்பாடுகள் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். Trump deploys National Guard to Los Angeles

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம் (Immigration and Customs Enforcement) அதிகாரிகள், கலிபோர்னியாவில் உள்ள உணவுக் கம்பெனிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் பெரிய அளவில் திடீர் சோதனைகளை நடத்தியதால், மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இதன் விளைவாக பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் எரிக்கப்பட்டன. போலீசார் கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி கலவரக்காரர்களை கட்டுப்படுத்தினர். சாலைகளில் வன்முறையால், கூட்ட நெரிசல் நிலவியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு 2,000 தேசிய காவல் துருப்பு படைகளை (National Guard)கலிபோர்னியாவிற்கு அனுப்ப உத்தரவிட்டார். Trump deploys National Guard to Los Angeles

இது மாநில ஆளுநர் கேவின் நியூசம் (Gavin Newsom) அனுமதி இல்லாமல் நடந்தது என்பதால், சட்ட ரீதியான மோதல் உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் கேவின் நியூசம், ‘ட்ரம்பின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. மாநில உரிமையை மத்திய அரசு மீறுகிறது” என்று குற்றம் சாட்டினார். இது மாநில தன்னாட்சிக்கு எதிரான தாக்குதல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மற்றும் மக்கள் உரிமை அமைப்புகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ட்ரம்ப் “தனிப்பட்ட வலிமையை காட்ட அரசு அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்” எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய – மாநில உறவுகளில் புதிய சட்டப்பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. Trump deploys National Guard to Los Angeles

ட்ரம்ப் வெளியிட்ட உத்தரவில், ‘ICE (Immigration and Customs Enforcement) மற்றும் பிற அரசாங்க ஊழியர்கள் தங்கள் வேலை செய்யும் இடங்களில், கூட்டம் மற்றும் போராட்டங்கள் நடக்கும் இடங்களில், அவர்களையும் மற்றும் அரசு சொத்துகளை பாதுகாக்க தேசிய காவல்படை துருப்பு படைகள் அனுப்பப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய காவல்படை துருப்பு என்றால் என்ன?

அமெரிக்க தேசிய காவல்படை துருப்பு (National Guard) என்பது அமெரிக்க ஆயுதப்படையின் ஒரு பகுதி. இது இராணுவக் காப்பு (Reserve Forces) போல செயல்படுகிறது.

அவசியமான நேரங்களில், நாட்டின் உள்விவகாரங்களிலும், வெளிநாட்டு சண்டைகளிலும் அனுப்பப்படுகிறது.

உதாரணமாக, ஈராக் போரின் போதும் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு விழா (ஜனவரி 2021) நேரத்தில், வாஷிங்டனில் 25,000க்கும் மேற்பட்ட தேசிய காவல்படை வீரர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share