ஜெம் வீரமணி மீது 13 சிறுமிகள் புகார்.. 9 வழக்குகள்.. 10 பேர் கைது!

By Mathi

|

Published on 16 Nov 2026, 9:28 AM

Jem Veeramani-Police

ஜெம் வீரமணிக்கு எதிராக 13 சிறுமிகள் புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் மீது 9 வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளதாகவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஜெம் வீரமணி உட்பட மொத்தம் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் எதிரி வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகார் அளித்ததின் அடிப்படையில் ஒன்பதாவது வழக்கு 13.11.2026 தேதி அன்று புதியதாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே ஜெம் வீரமணி மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கு 13.11.2026 – ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக வீரமணியின் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த ஓட்டுநர் பாலா என்கிற பெருமாள் என்பவர் 14.11.2026 தேதி அன்று காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டில், வட்டாட்சியர், மயிலாப்பூர் மற்றும் நிர்வாக நடுவர் அவர்கள் முன்னிலையில், காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை பாதிக்கப்பட்ட 13 சிறுமிகள் குறித்த புகார்களின் பேரில் ஒன்பது வழக்குகள் வீரமணி மீது பதிவாகியுள்ளது. இவ்வழக்குகள் எல்லாவற்றிலுமாக, வீரமணி மற்றும் அவரை சார்ந்தவர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ஒன்பதாவது வழக்கில், ஒரு வழக்கில் 11.11.2026 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவ்வழக்கில் நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது. இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel