மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை – நிஷாந்த் கைது

By Pandeeswari Gurusamy

|

Published on 16 Nov 2026, 10:40 AM

மதுரை தனுஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த நிஷாந்த் தருமபுரி அருகே உள்ள சேஷம்பட்டியில் வைத்து இன்று (நவம்பர் 16) கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல டாடா குழுமத்தின் அங்கமான தனிஷ்க் ஜுவல்லரி கிளை ஒன்று மதுரை காளவாசல் பைபாஸ் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி அதிகாலை தனிஷ்க் நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விசாரணையில் சுமார் 11 கிலோ வரை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் 9 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில், நிஷாந்த் என்ற இளைஞர் தனி ஆளாகக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவரது தோழியும் இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இன்ஸ்டா பிரபலமான மீனாட்சியின் ஸ்கூட்டரில் சென்றுதான் நிஷாந்த் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் ஐந்தரை கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இந் நிலையில், முக்கியக் குற்றவாளியான நிஷாந்த் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து, தனிப்படை காவல்துறையினர் பொள்ளாச்சி, கேரளா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் அவரை வலைவீசித் தேடி வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், நிஷாந்த் தற்போது தருமபுரி மாவட்டம் சேஷம்பட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். நிஷாந்த் தப்பிச் செல்ல முயன்ற போது பேருந்து ஓட்டுநர் அளித்த தகவல் அடிப்படையில் காவல்துறையினர் நிஷாந்தை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel