டாப் 10 நியூஸ்: திமுக எம்பிக்கள் கூட்டம் முதல் எடப்பாடி ஆலோசனை வரை!

Published On:

| By Selvam

காங்கிரஸ் கூட்டம்!

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று (ஜூன் 8) நடைபெறுகிறது.

திமுக எம்பிக்கள் கூட்டம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.

எடப்பாடி ஆலோசனை!

மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்தாய்வு!

ஆசிரியர் பயிற்றுநர்கள் பொது இட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.

நான் முதல்வன் திட்டம்!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரயில்வே, வங்கி பணிகளுக்கு கட்டணமில்லா ஆறு மாத பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 84-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டி20 உலக கோப்பை போட்டிகள்!

இன்றைய டி20 உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளும், மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

உலக பெருங்கடல் தினம்!

கடலின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை பேணும் வகையில் உலக பெருங்கடல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

செட் நுழைவு தேர்வு ஒத்திவைப்பு!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று நடைபெறவிருந்த செட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மாங்காய்  மோர் பச்சடி

அதே டெய்லர் அதே வாடகை: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share