அதே டெய்லர் அதே வாடகை: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

 

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்…

“மறுபடியும் மூன்றாவது முறையா மோடி பிரதமராகப் போறாரு… அனைத்து துறைகளிலும் அசுர வளர்ச்சி, புதிய பாய்ச்சல் தொடரும்னு இன்னைக்கும் அதே சேம் டையலாக்க பேசிருக்காருன்னு” சொன்னேன்.

“சரி அடுத்த ஐந்து ஆண்டுகள்ல டிரெஸ்க்கு எத்தனை கோடி செலவு பண்ணப்போறாருன்னு சொன்னா கொஞ்சம் நல்லாயிருக்கும்னு” கலாய்ச்சிட்டு கிளம்பிட்டாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Kirachand
இந்தியாவுக்கு கிடைத்த சரியான தலைவர் மோடி! – சந்திரபாபு நாயுடு
இது எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்!

நெல்லை அண்ணாச்சி
அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியில்
பாஜக …தோல்வி
ராமரும் எவ்வளவு தான் ” பொறுப்பாரு “….!!!!!

balebalu
எதிர்க்கட்சிகளுக்கு அடுத்த முறையும் வாய்ப்பில்லை – நிதிஷ்குமார்
நாளைக்கு நீங்களே ஆளும் கட்சில இருப்பீங்களா அல்லது
எதிர் கட்சியா தெரியாது
இதுல நாளொரு பேச்சு

ச ப் பா ணி
தட்டு கழுவுறது கொஞ்சம் ஈஸியா இருப்பது என்பது தான் ரசம் ஊற்றி சாப்பிடுவதன் அதிக நன்மை.


Sasikumar J
வெயில் அதிகமா இருக்கு அப்படின்னு ஸ்கூல் ஓபனிங் தள்ளி வச்சாங்க…!
இப்ப தினம் மழை பெய்து மறுபடியும் ஸ்கூல் திறக்கிறத தள்ளி வைப்பாங்களா…!

Kirachand
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! – சசிகலா
அதிமுக ரெண்டுபட காரணமே நீங்கதானே தாயீ?

balebalu
போன வாரம்
பாஜக வுடன் இருந்ததால் தான் தோற்றோம்
இந்த வாரம் பாஜக உடன் பிரிந்ததால் தான் தோற்றோம்
#அதிமுக பரிதாபங்கள்…

Niranjan kumar
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேண்டீன் போய் சமோசா சாப்பிட போகின்றனர்

ஆனால் உண்மை என்னவென்றால் சட்டமன்றங்களிலும் கேண்டீன் இருக்கும், சமோசாவும் இருக்கும்..

ArulrajArun
எதிர்க்கட்சிகளுக்கு அடுத்த முறையும் வாய்ப்பில்லை – நிதிஷ்குமார்
#ஜீ நவ் ; இதெல்லாம் நா பேச வேண்டிய டயலாக்

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நான் முதல்வன்… ரயில்வே, வங்கி பணிகளுக்கு இலவச பயிற்சி… முழு விவரம் இதோ!

நரேந்திர மோடிக்கு தார்மீக தோல்வி: ப.சிதம்பரம் விளாசல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share