கிச்சன் கீர்த்தனா: மாங்காய்  மோர் பச்சடி

டிரெண்டிங்

வெயிலுக்கு இதமாக என்ன சாப்பிடலாம் என்று நினைப்பவர்கள் வீக் எண்ட் ஸ்பெஷலாக இந்த மாங்காய்  மோர் பச்சடி செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

என்ன தேவை?

மிருதுவான வடுமாங்காய் – 5
பச்சை மிளகாய் – ஒன்று
கடுகு – அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் – அரை கப்
புளித்த கெட்டி மோர் – 2 கப்
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
காய்ந்த மிளகாய் (சிறியது) – ஒன்று
தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மாங்காய், தேங்காய், கால் டீஸ்பூன் கடுகு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதைக் கடைந்த மோரில் சேர்த்துக் கலக்கி கறிவேப்பிலையை சேர்க்கவும். எண்ணெயில் கால் டீஸ்பூன் கடுகு, ஒரு காய்ந்த மிளகாயை தாளித்து இதனுடன் சேர்த்தால்… மாங்காய் – மோர் பச்சடி தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மாங்காய் அடை

கிச்சன் கீர்த்தனா : மாங்கொட்டை ரசம்

அதே டெய்லர் அதே வாடகை: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: மோடிக்கு எதிராக நிதின் கட்கரி… ஆர்எஸ்எஸ் ஆபரேஷனை முறியடித்த அமித்ஷா… என்டிஏ முதல் கூட்டத்திலேயே உடைந்த ரகசியம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0