நயினார் நாகேந்திரனை சந்தித்தது ஏன்? – எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

Published On:

| By Selvam

தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்குவதற்காகவே பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தேன் என்று அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி இன்று (நவம்பர் 23) விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 22)  நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.

அதன்பிறகு எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வை, இன்றைய தினமலர் நாளிதழ் அரசியல் சாயம் பூசி செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில், எடப்பாடி பழனிசாமி கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில், எடப்பாடிக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகாராஷ்டிரா தேர்தல் ரிசல்ட்: டாப் கியரில் என்டிஏ

குடியரசு தலைவர் தமிழக வருகைக்கு எதிர்ப்பு… போராட்டத்தில் குதிக்கும் எஸ்.எஃப்.ஐ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share