மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 23) காலை தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில், என்.டி.ஏ கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த நவம்பர் 20-ஆம் தேதி 288 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் என்.டி.ஏ. கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, 11.15 மணியளவில் பாஜக 128, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 53, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 36 என மொத்தம் 217 இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் 19, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 19, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 12 இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் தான் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஆட்சியமைக்க 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் கடந்து முன்னிலையில் உள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கேரக்டர் ஆர்டிஸ்ட் : எந்த வேடமானாலும் வெளுத்துக் கட்டும் குணசித்திர நடிகர் இளவரசு
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து: முதல்முறையாக மவுனத்தை உடைத்த மோகினி தே