கே.ஜி.எஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள பான் இந்தியா படம் “சலார்”.
இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஒரு சில காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சலார் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கே.ஜி.எஃப் படத்திற்கும் சலார் படத்திற்கும் தொடர்பு உள்ளது. இந்த படம் மூலமாக பிரசாந்த் நீல் ஒரு தனி யுனிவர்ஸை உருவாக்க உள்ளார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் பிரசாந்த் நீல், ” சலார் படத்தின் கதைக்கும் கே.ஜி.எஃப் படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. “சலார்” படத்தின் கதையும், அந்த கதையின் எமோஷனும் கே.ஜி.எஃப் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு புதிதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
சலார் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ள முதல் பாகத்திற்கு சலார் Ceasefire என்று பெயரிடப்பட்டுள்ளது.
சலார் படத்தின் ட்ரெய்லர் வரும் டிசம்பர் 01 தேதி வெளியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
பெண்களை வீட்டுக்குள் முடக்கிய காலம் மலையேறி விட்டது: ஸ்டாலின்
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு: குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!
