chembarambakkam lake water release

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு: குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!

தமிழகம்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று (நவம்பர் 29) வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுவதால் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஏரி, குளம், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 25.5 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும். மொத்தம் 24 கன அடி கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதன் காரணமாக நேற்று வினாடிக்கு 200 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படும் என்றும் அடையாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

மதுரையில் வாள் வீச்சு: 7 வயது சிறுவன் உள்ளிட்ட ஐவருக்கு வெட்டு! என்ன நடக்கிறது தமிழகத்தில்?

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *