சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் எப்படி எல்லாம் தலைவிரித்தாடுகிறது என நமது மின்னம்பலத்தில் நேற்று ஜூன் 6-ந் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், பத்திரப் பதிவுத்துறையில் கடந்த மார்ச் மாதம் அறிமுகமான ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ திட்டத்திற்கான (Online Registration) வழிகாட்டுதல்களை பதிவுத்துறை இன்று ஜூன் 7-ந் தேதி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு: ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தங்களோ நேரடியாக இணையவழியே ஆவணப்பதிவு முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24X7X365) இணையதளத்தின் மூலம் இணையவழி தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும். ஆவணப் பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் உள்நுழைவிற்கும் அலைபேசிக்கு புலனம் (Whatsapp) மூலமும் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தங்கள் உள்நுழைவு வழியே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
“வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration)” நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.

அ. சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யக்கூடிய ஆவணங்கள்:
- முதல் விற்பனை மனை (First sale of Plot)
- முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat)
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள்
- வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் இரசீது ஆவணங்கள்
பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தாளர்கள் மற்றும் வங்கிகள் அறிவுறுத்தல்கள்
- பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினை தங்களோ உருவாக்கி மேற்படி ஆவணங்களை (இரசீது) இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
- ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதி பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யவேண்டும்.
- ஆதார் ஆவணத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.
தொழில்நுட்ப தேவைகள்
- இணைய இணைப்பு
- UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் கவரும் கருவி
- புகைப்படக் கருவி (Webcam)
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் விபரம் தொடர்பு அலுவலர் பெயர்
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
| விபரம் | தொடர்பு அலுவலர் பெயர் (டி.சி.எஸ் நிறுவனம்) | எண்கள் |
| வன்பொருள் (Hardware) | முகமது யூனுஸ் அருண்குமார் | 7397574067 9940446694 |
| மென்பொருள் (Software) | சீனிவாஸ் கணேஸ் டில்லி பாபு | 6369798973 8525805957 |
