கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் காவல் துறை வாகனத்தில் கல் எறிந்து கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கு நீதி கேட்டு ஜூலை 17 ஆம் தேதி சுமார் 2000 பேர் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது அது கலவரமாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது.
பள்ளிக்கு சொந்தமான வாகனங்களை போராட்டக்காரர்கள் எரித்து சாம்பலாக்கினர். காவல் துறை வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தினர்.
இந்த வழக்கில், வாட்சாப் குழு அமைத்து போராட்டக்காரர்களை ஒன்று சேர்த்ததாக ஏராளமானவர்களை போலீஸ் கைது செய்தது.
அதேபோல் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையிலும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இது வரை 300 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து ,சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 30 ) ஆத்துரை சேர்ந்த விஷ்வா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மு.வா.ஜெகதீஸ் குமார்