‘மண்டை மேல் உள்ள கொண்டையாக நிர்வாகத் திறமையின்மை’ – தவெக அரசை விளாசிய நயினார்

By Pandeeswari Gurusamy

|

Published on 5 Nov 2026, 1:04 PM

அமைச்சர் நிர்மல் குமார் எத்தனை போலிப் புகார்களை அடுக்கினாலும், அழுது புலம்பினாலும், உங்கள் மண்டை மேல் உள்ள கொண்டையான நிர்வாகத் திறனின்மையையும் தவெகவின் ஆட்சியினால் தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளையும் என்றும் மறைக்க முடியாது என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆதரவுடன் அதிமுக செயல்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “அது கண்ணாடி, அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே, மக்களை அனுதினமும் விலைவாசியால் வதைக்கும் விதமாக ஒரு யூனிட்டை ரூ.41-க்கு மின்சாரக் கொள்முதல் செய்ய முயற்சித்ததில் தொடங்கி கைதிகள் தப்பியோடல் வரை, தொடர்ந்து தனது துறையில் நடக்கும் தவறுகளைத் தடுக்க வழி தெரியாமல், தற்போது தவெக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுகவும் பாஜகவும் சதி செய்வதாக அடிப்படையே இல்லாத ஒரு அபாண்டமான பழியை நீங்கள் சுமத்தியுள்ளதைப் பார்க்கையில் வேடிக்கையாக இருக்கிறது.

மக்கள் அளித்த தீர்ப்பை அவமதித்து, வென்ற மாற்றுக் கட்சி வேட்பாளர்களை விலைபேசி வலை விரித்து இழுத்து, இடைத்தேர்தலில் மட்டுமே கண்ணாக இருக்கும் தவெக அரசு, தற்போது மற்ற கட்சியினர் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர்களை வாங்க முயற்சிப்பதாக சொல்வது ஆகச்சிறந்த நகைமுரண்! தங்களது இந்த மட்டமான பொய்யை மொக்கை காமெடி என்று மக்கள் கடந்துதான் செல்வார்களே ஒழிய, தங்களது மடைமாற்று வேலைகளுக்கு மடியமாட்டார்கள்!

ADVERTISEMENT

நீங்கள் எத்தனை போலிப் புகார்களை அடுக்கினாலும், அழுது புலம்பினாலும், உங்கள் மண்டை மேல் உள்ள கொண்டையான நிர்வாகத் திறனின்மையையும் தவெகவின் ஆட்சியினால் தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளையும் என்றும் மறைக்க முடியாது! எனவே, அடுத்தவரைப் பார்த்து வீணாக குறை சொல்லும் முன், முதலில் குதிரைப் பேரத்தை விடுத்து, குடிமக்களின் நலனில் கவனத்தைச் செலுத்துங்கள்!” என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel