TNPSC குரூப்-4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்.. நவ.8 வரை விண்ணப்பிக்கலாம்!

By Mathi

|

Published on 5 Nov 2026, 5:25 AM

TNPSC Group4

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 8-ந் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக TNPSC செயலாளர் பானோத் மருகேந்தர் லால் நேற்று (நவம்பர் 4) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV பணிகள்) 2026-க்கான அறிவிக்கை எண் 11/2026, அக்டோபர் 6-ந் தேதி வெளியிடப்பட்டது. இதற்கிடையே, தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அக்டோபர் 30-ந் தேதி வெளியிட்ட அரசாணை (நிலை) எண் 68-ன்படி, வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 8-ந் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த அக்டோபர் 6-ந் தேதி வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு அறிவிக்கையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக நவம்பர் 5-ந் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 8-ந் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel