முகம் டல்லடிக்குதா? பியூட்டி பார்லருக்கு ஓட வேண்டாம், வீட்டில் இருக்கும் காபித்தூள் போதும்!

By Minnambalam Desk

|

Published on 5 Nov 2026, 12:33 AM

வெயில், தூசி, புகை, கூடவே சருமத்தைச் சரியாகக் கவனிக்காத சோம்பல் எல்லாம் சேர்ந்து முகத்தைப் பொலிவிழக்க வைத்துவிடும். இதற்காக அடிக்கடி பார்லருக்குப் போய்ச் செலவழிக்க வேண்டியதில்லை. சமையலறையில் இருக்கும் காபித்தூளோடு வேறு சில பொருட்களைச் சேர்த்து, எளிதாக ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளலாம்.

காபித்தூள் ஏன் நல்லது?

ADVERTISEMENT

காபித்தூளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. மென்மையான ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தும்போது, தோலின் மேல் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க இது உதவும். அதனால் முகம் சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் தெரியலாம்.

வீட்டிலேயே செய்யக்கூடிய 7 காபி ஃபேஸ் பேக்குகள்

ADVERTISEMENT

1. காபி + தேன்: ஒரு டீஸ்பூன் காபித்தூளுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்துக் கழுவலாம்.

2. காபி + தயிர்: காபித்தூள், தயிர் ஆகியவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் வைத்திருக்கலாம்.

ADVERTISEMENT

3. காபி + தேங்காய் எண்ணெய்: ஒரு டேபிள்ஸ்பூன் காபித்தூளுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்.

4. காபி + மஞ்சள்: ஒரு டேபிள்ஸ்பூன் காபித்தூள், அரை டேபிள்ஸ்பூன் பால், அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்த்துக் கலக்குங்கள். முகத்தில் 15 நிமிடம் வைத்துக் கழுவுங்கள்.

5. காபி + கடலை மாவு: மூன்று டேபிள்ஸ்பூன் காபித்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு, இரண்டு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்தலாம்.

6. காபி + சர்க்கரை: ஒரு ஸ்பூன் காபித்தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலக்கலாம். ஆனால், முகத்தில் சர்க்கரை ஸ்க்ரப் செய்தால் சிலருக்கு எரிச்சல் வரலாம், கவனமாக இருங்கள்.

7. காபி + ஆரஞ்சு தோல் பொடி: காபித்தூள், ஆரஞ்சு தோல் பொடி, தயிர் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் 10 நிமிடம் வைத்துக் கழுவலாம்.

பயன்படுத்தும்போது இதைக் கவனியுங்கள்

  • எல்லோரின் சருமத்துக்கும் காபி ஃபேஸ் பேக் ஒத்துவரும் என்று சொல்ல முடியாது. வறண்ட சருமம், சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருங்கள்.
  • முதலில் கையின் சின்னப் பகுதியில் தடவிப் பேட்ச் டெஸ்ட் பார்த்துவிடுங்கள்.
  • முகத்தில் அழுத்தித் தேய்க்காதீர்கள்.
  • பயன்படுத்திய பிறகு மாய்ஸ்சரைசர் தடவுவது நல்லது.
  • எரிச்சல், சிவந்துபோவது போன்றவை வந்தால் உடனே நிறுத்திவிடுங்கள்.

ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வீட்டு வைத்தியம் என்றாலும் எல்லோருக்கும் ஒரே பலன் தராது. உங்கள் சருமத்துக்கு எது ஒத்துவருகிறது என்று பார்த்துக்கொண்டு தொடருங்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்!

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel