ஆயுத பூஜை லீவுக்கு போன ஃப்ரண்ட் போன் பண்ணாப்ல, ‘சார்… இன்னும் ரெண்டு நாள் லீவு வேணும்… ஆம்னி பஸ்லாம் நிறுத்திட்டாங்க. பஸ்ஸே கிடைக்கல…’ அப்படின்னாரு. ஏம்ப்பா… ஆம்னி பஸ் ஸ்ட்ரைக் வாபஸ் வாங்கிட்டாங்களாமே… அவங்க சங்கத்துலேர்ந்து இவ்வளவுதான் கட்டணம் வாங்கணும்னு கூட அறிவிச்சிருக்காங்களேனு கேட்டேன்.
அதுக்கு அந்த ஃப்ரண்ட், ‘ஆமாமா… அந்த கட்டணத்தைப் பாருங்க. அரசாங்கம் இருக்கும்போதே இப்படி அவங்களால அறிவிக்க முடியுதுன்னா எவ்வளவு தைரியம் பாருங்க. திருச்சிக்கு 2400 வரைக்குமாம்… திருநெவேலிக்கி 3900 ரூபாயாம். இதுக்கு பதிலா ஆம்னி ஏர்லைன்ஸ்னு பேர் வச்சு அரசாங்கமே விமான சர்வீஸ் ஆரம்பிச்சிடலாம் சார்’னு அலுத்துக்கிட்டாரு.
நானும், ‘அட ஆமாம்ப்பா…. ஆளுநருக்கு எதிரா பொங்குற அனைத்துக் கட்சித் தலைவர்கள்ல ஒருத்தர் கூட ஆம்னி கட்டணக் கொள்ளைக்கு எதிரா ;பொங்கலையேப்பா… இதெல்லாத்தையும் மக்கள் நாமதான் அனுபவிக்கணும். நீ மெதுவா பஸ்சை பிடிச்சு வா’னு சொல்லிட்டு வச்சிட்டேன்.
நீங்க அப்டேட் பாருங்க…
கோழியின் கிறுக்கல்!
சாலை எங்கும் பூசணிக்காய்கள் சிதறிக் கிடக்கின்றன,
பாவம், அவற்றின் மீது எவர் கண் பட்டதோ!?
சரவணன். ????
நம்ம பலம் தெரிந்தவர்கள் – நண்பர்கள்
நம்ம பலவீனம் தெரிந்தவர்கள் – மனைவி
Kirachand
என்ன பெரிய காஸா மீது இஸ்ரேல் நடத்தும் வான்வழி தாக்குதல்…
மனைவி கணவன் மீது வீசும் பூரிக்கட்டை தாக்குதல் பாத்துருக்கியா?
காவல்காரன்.. pic.twitter.com/kunxVRqFeG
— கடைநிலை ஊழியன் (@Suyanalavaathi) October 24, 2023
சரவணன். ????
ஆரியம், திராவிடம் இருக்கிறதா, இல்லையா என அறிஞர்கள்தான் கூற வேண்டும்; நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல – எடப்பாடி பழனிசாமி.
சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் புக்கை படிச்சு பார்த்தாவது சொல்லுங்களேன்
கோழியின் கிறுக்கல்!!
நாலு நாள் லீவுக்கு சொந்த ஊருக்கு வந்துட்டு, லீவு முடிஞ்சு கிளம்புவதிலேயே ரொம்ப கடினமான பகுதி,
கிளம்புவதற்கு நம் மனதை தயார் செய்வது தான்!!
கடைநிலை ஊழியன்
calling manager –
manager – என்னப்பா, பஸ் ஸ்ட்ரைக் நாளைக்கு வேலைக்கு வர முடியாது அதான..
me – ஆமா..
manager – அது காலைல போட்ட நியூஸ்.. எல்லாம் ஓகே ஆகிருச்சு.. ஒழுங்கா வந்து சேரு..
#Thalapathy68 Cast Update Today🔥#LeoIndustryHit #Leo @actorvijay https://t.co/z1an10SgMh
— Mᴜʜɪʟツ𝕏 (@MuhilThalaiva) October 24, 2023
balebalu
கவுதமி விவகாரம் என்னிடம் வந்திருந்தால் உதவி செய்து இருப்பேன் – ஆளுநர் தமிழிசை
ஆளுநர் மாளிகை ல “சொல்வதெல்லாம் உண்மை” ஷூட்டிங் கூட நடத்துவாங்க போல
மயக்குநன்
தமிழகத்தில் நேர்மையான, ஊழல் இல்லாத ஆட்சியை பாஜகவால் மட்டுமே தரமுடியும்!- அண்ணாமலை.
அப்படி ஓர் ஆட்சியைத் தந்திருந்தா… கர்நாடகாவில் ஆட்சி மாற்றமே நடந்திருக்காதே..?!
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
லாக் ஆஃப்
Comments are closed.