ADVERTISEMENT

“மாவீரன்” அப்டேட் வெளியிட்ட படக்குழு!

Published On:

| By Selvam

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மண்டேலா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மடோன் அஷ்வின். யோகி பாபு கதாநாயகனாக நடித்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படத்தை மடோன் அஷ்வின் இயக்குகிறார்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் மாவீரன் திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1649752448012259330?s=20

இந்தநிலையில் மாவீரன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை சாந்தி டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் யோகி பாபு, சரிதா, அதிதி சங்கர், மிஸ்கின், சிவகார்த்திகேயன் படமாக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதி சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT

செல்வம்

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

ADVERTISEMENT

அரசு பங்களாவை காலி செய்த ராகுல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share