நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்தநிலையில் இயக்குநர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள் படம் ஆகஸ்ட் 16, 1947.
அறிமுக இயக்குநர் பொன்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.
பிரிட்டிஷார் ஆளுகையில் இருந்த இந்தியாவில் அன்றைய அரசு எந்திரத்தின் அடக்குமுறையை கதைக்களமாக கொண்ட இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 27) சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் சிவ கார்த்திகேயன் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டு பேசினார்.
“1947 திரைப்படம் நம் சுதந்திரத்தின் கதை. சுதந்திரத்திற்காக நிறைய பேர் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அதைத்தாண்டி ஒரு வலி நிறைந்த விஷயத்தை தான் இப்படத்தில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். டிரைலர் பார்க்கும்போதே எல்லாருடைய உழைப்பும் தெரிகிறது.
முதல் படமே வரலாற்று கதையம்சம் உள்ள படமாக தேர்வு செய்துள்ள இயக்குனர் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறார். சவாலை சந்திக்க ரெடியாக இருக்கிறார் என்றால் அவர் சாதிக்கவும் தயாராக இருக்கிறார் என்பது தான் அர்த்தம்.

கவுதம் கார்த்திக்கை சந்தித்த பிறகு தான் நான் கார்த்திக் சாரை பார்த்தேன். கார்த்திக் சாரின் நடிப்பு தனித்துவமாக இருக்கும். ஒரு பெரிய ஹீரோவின் பையன் என கவுதம் எப்போதும் காட்டிக் கொண்டதில்லை.
திருமணத்துக்கு பின் வாழ்க்கையே மாறி இருக்கும். அது ஒரு பொறுப்பு என்றுகூட சொல்லலாம். நான் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்ட பிறகு தான் எனக்கு தனியாக நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
திருமணம் தான் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும். ஏ. ஆர். முருகதாஸ் சாரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் ஏழாம் அறிவு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பின்னால் இருந்து பணியாற்றினேன்.
இதையடுத்து அவர் தயாரித்த எங்கேயும் எப்போதும் பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினேன். பின்னர் அவரது தயாரிப்பில் மான் கராத்தே படத்தில் நடித்தேன். தற்போது அவர் தயாரிக்கும் படத்தின் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன்.
விரைவில் வேறு ஒரு பெரிய சம்பவமும் நடக்க உள்ளது என்று முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதை மறைமுகமாக குறிப்பிட்டார் சிவகார்த்திகேயன்.
மேலும் அவர், “பொதுவாக ஒருவர் வளர்ந்தால் சந்தோஷப்படுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் எப்படியாவது என் கூட இருக்கிறவர்கள் வளர்ந்துவிட வேண்டும் என ஆசைப்படுபவர்கள் ரொம்ப கம்மி தான்.
வீரம் படத்தில் அஜித் சார் சொல்வது போல், கூட இருக்குறவங்கள நாம பாத்துக்கிட்டா, மேல இருக்குறவன் நம்மள பாத்துக்குவான்னு சொல்லி, எப்பவுமே நீங்க நினைக்கும் விஷயங்கள் எல்லாம் பெருசா நடக்கும் என இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸை பார்த்து கூறியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இராமானுஜம்
ஒரு கல்லூரியும் சில தீரமிக்க இளைஞர்களும்… இதோ ஒரு சமகால சரித்திரம்!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி