தற்போதைய தமிழக முதல்வர் விஜய், தமிழக வெற்றிக் கழகத் தலைவராக பங்கேற்ற கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த பெருந்துயரம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தமிழகத்தையே உலுக்கிய அந்தத் துயரம் குறித்து ஓராண்டுக்கு முன்பு மின்னம்பலம் வெளியிட்ட ஆவணப்படத்தை மீண்டும் வாசகர்களுக்காக வழங்குகிறோம்.
இது கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தைத் தேடும் ஆவணப்படம் அல்ல. கரூர் போன்ற ஒரு பெருந்துயரம் நிகழக்கூடிய சமூக மனநிலை எப்படி உருவானது என்பதை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாழ்க்கை வழியாகக் கேள்விக்கு உட்படுத்தும் ஆவணப்படம்.
