ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாச மெசேஜ்: நீதிபதி விக்டோரியா கவுரி கடும் கண்டனம்!

By Mathi

|

Published on 22 Nov 2026, 12:28 PM

Kallakurichi- Judge

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்காததற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கவுரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பாலின உணர்திறன், உள்புகார் குழு சார்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தின்பாலின உணர்திறன் மற்றும் உள் புகார் குழுவின் தலைவர் நீதிபதி விக்டோரியா கௌரி பேசுகையில், ”இப்போ, இப்போ கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தற்சமயம் இருக்கக்கூடிய ஒரு எம்.எல்.ஏ ஆபாச செய்தி அனுப்புகிறார். அப்போ அது பணியிடத்தில் துன்புறுத்தல் இல்லையா? அவர்களுடைய கணவர் புகார் கொடுக்கிறார். இன்று வரைக்கும் இந்த மாநில அரசாங்கத்துல வேலை செய்து கொண்டிருக்கக்கூடிய காவல்துறை வாளாவிருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்தார்.

நீதிபதி விக்டோரியா கவுரியின் இந்த கண்டனம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel