கொளத்தூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

By Mathi

|

Published on 22 Nov 2026, 12:43 PM

Kolathur

தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டவர் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு. இந்த தேர்தலில் வி.எஸ். பாபு 82,997 வாக்குகளையும், மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகளையும் பெற்றனர். அதிமுக வேட்பாளர் பி.சந்தான கிருஷ்ணன் 18,430 வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

ஆனால் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த நவம்பர் 19-ந் தேதி வி.எஸ்.பாபு, மாரடைப்பால் காலமானார்.

இந்த நிலையில் வி.எஸ். பாபு மறைவை தொடர்ந்து கொளத்தூர் சட்டசபை தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

தமிழகத்தில் ஏற்கெனவே திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. தற்போது கொளத்தூர் தொகுதியும் காலியானதால், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel