பிடிச்ச ஜீன்ஸ் சீக்கிரமே நிறம் மங்கிடுதா? புதுசு மாதிரியே வைத்திருக்க 10 சின்ன வழிகள்!

By Minnambalam Desk

|

Published on 5 Nov 2026, 5:30 PM

ஆபீஸ், காலேஜ், ஊர் சுற்றல் என்று எங்கே போனாலும் ஜீன்ஸ்தான் பலருக்கும் முதல் தேர்வு. ஆனால், ஒரே ஜீன்ஸை அடிக்கடி போட்டு, தப்பான முறையில் துவைத்தால், நிறம் மங்கும், துணியும் சீக்கிரமே பாழாகும். சிலர் ஒருமுறை போட்டதுமே மெஷினில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். இந்தப் பழக்கத்தை மாற்றி, இந்த 10 வழிகளைப் பின்பற்றினால் உங்கள் ஜீன்ஸ் நீண்ட நாள் புதுசு மாதிரியே இருக்கும்.

துவைப்பதற்கு முன்

ADVERTISEMENT

1. உள்பக்கம் திருப்பிப் போடுங்கள்: ஜீன்ஸை உள்ளே வெளியே திருப்பிவிட்டு மெஷினில் போட்டால், வெளிப்புற நிறம் மங்குவது ஓரளவு தடுக்கப்படும்.

2. குளிர்ந்த தண்ணீர்தான் நல்லது: சுடுதண்ணீர் வேண்டாம். குளிர்ந்த நீரில் துவைத்தால் துணி சுருங்கும் அபாயம் குறையும்.

ADVERTISEMENT

3. அடிக்கடி துவைக்காதீர்கள்: ஒவ்வொரு முறை போட்டதும் துவைக்க வேண்டிய அவசியமே இல்லை. அதிக அழுக்கோ வியர்வையோ இல்லையென்றால், சில முறை போட்ட பிறகு துவைக்கலாம்.

4. சின்னக் கறைக்கு முழுசாகத் துவைக்க வேண்டாம்: ஏதாவது சிறிய கறை பட்டால், ஈரத்துணியால் அந்த இடத்தை மட்டும் துடைத்துவிடுங்கள்.

ADVERTISEMENT

5. மிதமான சோப்பு: கடுமையான ரசாயனம் இல்லாத மென்மையான சோப்பைப் பயன்படுத்துங்கள்.

துவைக்கும்போது

6. நீண்ட நேரம் ஊறப்போடாதீர்கள்: நீண்ட நேரம் தண்ணீரில் ஊறினால் துணியின் இழைகள் பாதிக்கப்படலாம்.

7. மென்மையான வாஷ் சுழற்சி: மெஷினில் துவைத்தால், ‘Gentle’ அல்லது மென்மையான சுழற்சியைத் தேர்ந்தெடுங்கள்.

8. வினிகர் ஒரு சின்ன உதவி: கடைசியாக அலசும் நீரில் கொஞ்சம் வெள்ளை வினிகர் சேர்த்தால் நிறம் தங்க உதவும் என்கிறார்கள். ஆனால் இதை ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை.

காயவைக்கும்போது

9. கடும் வெயிலில் காயவைக்காதீர்கள்: நேரடியாக வெயிலில் போட்டால் நிறம் மங்கும். நல்ல காற்று வரும் நிழலான இடமே சிறந்தது.

10. ட்ரையரில் அதிக சூடு வேண்டாம்: வாஷிங் மெஷின் ட்ரையரில் அதிகச் சூட்டில் காயவைப்பதையும் தவிர்க்கலாம். இயற்கைக் காற்றில் உலர்த்தினால் துணியின் தரமும் நிறமும் நீண்ட நாள் தாங்கும்.

இந்த வழிகள் எல்லாமே சின்னச் சின்ன விஷயங்கள்தான். ஆனால், அடுத்த முறை ஜீன்ஸைத் துவைக்கும்போது இவற்றை நினைவில் வைத்துக்கொண்டால், உங்களுக்குப் பிடித்த ஜீன்ஸ் இன்னும் பல மாதங்கள் உங்களோடு வரும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel