தீபாவளிக்குச் சில்லறை நோட்டுகள் கிடைக்காது என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகச் சுற்றிவருகிறது.
₹10, ₹20, ₹50 நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு வரப்போகிறதாம். இது வெறும் வதந்தி என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெளிவாகச் சொல்லிவிட்டது.
சிறிய மதிப்பு நோட்டுகள் போதுமான அளவு இருப்பதாகவும், இதுபற்றிப் பயப்படத் தேவையில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பில் சுற்றிய சுற்றறிக்கை
தீபாவளி நேரத்தில் புதிய ₹10, ₹20, ₹50 நோட்டுகள் போதுமான அளவில் கிடைக்காது என்று சொல்லும் ஒரு சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அக்டோபர் 27, 2026 என்று தேதி போடப்பட்டு, ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னம், ஆளுநரின் கையெழுத்து எல்லாம் இருந்தன. அதனால் பலரும் இதை உண்மை என்று நம்பிவிட்டார்கள்.
ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
அந்தச் சுற்றறிக்கை போலியானது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ₹10, ₹20, ₹50 உள்ளிட்ட எல்லா மதிப்பு நோட்டுகளும் ரிசர்வ் வங்கியின் கருவூலங்களிலும் பண இருப்பு மையங்களிலும் போதுமான அளவு இருப்பதாகவும் சொல்லியுள்ளது. போலிச் சுற்றறிக்கையில் உள்ள தகவல்கள் தவறானவை என்றும், இப்படிப்பட்ட செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
டிஜிட்டலுக்கு மாறச் சொன்னதா?
அந்தப் போலிச் சுற்றறிக்கையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கச் சிறிய மதிப்பு நோட்டுகள் அச்சடிப்பது படிப்படியாகக் குறைக்கப்படுகிறது என்றும், UPI, டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்துமாறும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி இப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அதனால் தீபாவளிக்கு முன் சில்லறை நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு வருமோ என்ற பயம் தேவையில்லை.









