‘முரசு புயலில் சிக்கிய 8 தமிழக மீனவர்கள் உயிரிழப்பு.. கரை ஒதுங்கிய சடலங்கள்.. அமைச்சர் மரிய வில்சனை முற்றுகையிட்ட உறவினர்

By Pandeeswari Gurusamy

|

Published on 5 Nov 2026, 3:40 PM

நடுக்கடலில் மாயமான காசி மேடு மீனவர்களின் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காசிமேடு பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் செண்பகராஜன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சூர்யா என்பவரோடு 9 பேர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், முரசுபுயலின் போது இவர்கள் காணாமல்போய் இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, காசிமேடு மீன்பிடி துறைமுகக் காவல் நிலையத்திலும் மீன்வளத்துறை அலுவலகத்திலும் 9 மீனவர்களின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மேலும், அவர்களைத் தேட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அப்புகாரில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் மீனவர்கள் எங்கு உள்ளனர் என்று தெரியவில்லை என்றும், அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்படுகின்றனர் என்றும் குற்றம்சாட்டி மீனவர்களின் உறவினர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது முக்கிய சாலை என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பரபரப்பான சூழலும் நிலவியது. இதனையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகளும் போலீசாரும் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், ஆந்திராவின் கோத்தப்பட்டினம் பள்ளிப்பாலம் கடற்கரையில் 8 பேரின் சடலங்கள் கரைஒதுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், தமிழக மீனவர் மோகன் என்பவரின் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. எஞ்சிய 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட பிறகே மற்ற மீனவர்களின் விவரங்கள் தெரியவரும். மேலும் மீனவர்களின் உடல்களைத் தேடும் பணியில் இந்திய கடலோரக் காவல் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

‘முரசு’ புயலின் போது நடுக்கடலில் மாயமான மீனவர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் நேரில் வருகை தந்தார். அப்போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் உயிர்போன பிறகுதான் வருவீர்களா என்று அமைச்சர் மரிய வில்சனை நோக்கி கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மீனவர்கள் சென்ற படகு ஓனர்மேல் தவறுகள் இருப்பதாக தெரிய வருகிறது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்.4 பேரின் உடல் நெல்லூரில் கிடைத்ததாக தகவல் உள்ளது. மீதம் உள்ள 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel