ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

By Pandeeswari Gurusamy

|

Published on 5 Nov 2026, 5:07 PM

monitoring officers appointed

தமிழ்நாட்டில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையராக இருந்த ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ள சரயு, பேரூராட்சிகள் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநராகப் பணியாற்றி வந்த பழனி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குனர் ஆகிய பதவிகள், இந்திய ஆட்சிப் பணி ஊதிய விகிதங்களின் படி சமூக நலத்துறை இயக்குநர் பதவிக்கு இணையான அந்தஸ்து மற்றும் பொறுப்புகளைக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel