முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – சப் இன்ஸ்பெக்டர் கைது

By Pandeeswari Gurusamy

|

Published on 5 Nov 2026, 4:46 PM

நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் தாளையூத்தைச் சேர்ந்த குமார் என்பவர், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் விஜய் வருகை தந்ததையொட்டி, நெல்லை மாநகரப் பகுதியில் இருந்து ஆண் மற்றும் பெண் காவலர்கள் குழுவாக பாதுகாப்புப் பணிக்காக சென்றுள்ளனர். பணிகளை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு அனைவரும் வேனில் நெல்லைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது, வேனில் தனக்கு முன் உள்ள இருக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பெண் காவலருக்கு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காவலர், நெல்லை வந்தடைந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் நேரில் சென்று புகார் அளித்தார்.

கமிஷனரின் அறிவுறுத்தலின்படி, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

ADVERTISEMENT

இச்சம்பவம் நெல்லை காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel