ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இல்ல திருமண விழாவில் முதல்வர் விஜய், நடிகை திரிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒஎஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் ஸ்ரேயா – உஜ்வல் பெலானி திருமணம் நவம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், கலந்துகொண்டு மணமக்களான ஸ்ரேயா – உஜ்வல் பெலானியை வாழ்த்தினார்
இந்த நிகழ்ச்சியில் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர், நடிகை திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக முதலமைச்சர் விஜய் உடன் நடிகை திரிஷாவும் மேடை ஏறி மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
ஏற்கனவே முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா, தனது கணவருக்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். பின்னர் அந்த மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய்யும் நடிகை திரிஷாவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










