நேரு ஸ்டேடியத்தில் விசாரணை நடத்த வேண்டும் : செந்தில் பாலாஜி வழக்கில் கோரிக்கை!

By Kavi

|

Published on 5 Nov 2026, 8:21 PM

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 25 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. 

ADVERTISEMENT

அப்போது போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம் செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000 க்கும் அதிகமானோர் மீது  வழக்கப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கில் 25 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த சூழலில் குற்றம் சாட்டப்பட்ட பலரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

ADVERTISEMENT

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோகேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி உட்பட முதல் 50 பேருக்கு குற்றப் பத்திரிக்கை நகல் பென்டிரைவ் வடிவில் வழங்கப்பட்டது. 

இதைப் பெற்றுக் கொண்ட அவர்கள், குற்றப்பத்திரிகை நகலை காகித வடிவில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் தற்போது விசாரணை நடைபெறும் நீதிமன்ற அறை குறுகியதாக இருப்பதால் அடுத்த முறை விசாரணையில் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் நேரு ஸ்டேடியம் அல்லது தீவு திடல் போன்ற நெருக்கடி இல்லாத இடங்களில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

அப்போது அரசு சார்பில் விசாரணையை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து நீதிபதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அடுத்த 50 பேருக்கு (51-100) குற்றப்பத்திரிகை வழங்குவதற்காக விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel